எம்.ஜி‌.ஆர் நினைவு நாள்: சாம்பவர் வடகரையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி‌.ஆர் நினைவு நாள்: சாம்பவர் வடகரையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X
சாம்பவர் வடகரையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி‌.ஆர் 34ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

செங்கோட்டை ஒன்றிய அதிமுக சார்பில் சாம்பவர் வடகரையில் மறைந்த முன்னாள் முதல்வர் அதிமுகவின் நிறுவன தலைவருமாகிய எம்.ஜி‌.ஆர் 34ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா கிருஷ்ண முரளி குட்டிய்ப்பா வழிகட்டுதலின்பேரில் சாம்பவர் வடகரையில் அதிமுக சார்பில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி‌.ஆர் திருவுருவ படத்திற்கு செங்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் ஆய்குடி கே.செல்லப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஊர்மேலழகியான் ஜெபக்குமார், சாம்பவர் வடகரை பேரூர் கழக செயலாளர் கந்தசாமி, ஆய்க்குடி ஓட்டுநர் மீனாட்சி சுந்தரம், பேச்சி ஆசாரி, எ.சிவலிங்கம், விஜயலெக்ஷ்மி, நாகராஜ், காளியப்பன், சுதா, மாடத்தி, ராமசாமி அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!