தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்தவர் கோட்டையம் என்பவரின் மகன் முத்துக்குமார்(26). இவர் மீது கடையநல்லூர், ஆய்க்குடி, இலத்தூர், சேர்ந்தமரம் காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!