சாம்பவர் வடகரையில் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் கைது: பாேலீசார் அதிரடி

சாம்பவர் வடகரையில் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் கைது: பாேலீசார் அதிரடி
X

சாம்பவர் வடகரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட முத்தையா என்ற நபரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.

சாம்பவர் வடகரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சிதம் என்ற மூதாட்டி அவரது வீட்டின் வெளியே முற்றம் தெளித்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் தனது செயினை பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார்.

பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி சரண்யா மேற்பார்வையில் வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி அறிவுறுத்தலின்படி சார்பு ஆய்வாளர் காசிவிஸ்வநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து துரிதமாக செயல்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட சாம்பவர் வடகரை இந்திரா காலனியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் முத்தையா என்ற நபரை 24 மணி நேரத்திற்குள் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடமிருந்து பறித்துச் சென்ற தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை உடனடியாக கைது செய்த காவல்துறையினரின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் தங்களின் வெகுவாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!