தென்காசி அருகே காெலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

தென்காசி அருகே காெலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது
X

பைல் படம்.

தென்காசி அருகே அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைரவன் குளத்தில் கருத்தப்பாண்டி (64) என்பவருக்கு சொந்தமான வயலில் அவரும் அவரது மகன் கார்த்திகேயன் (32) என்பவரும் வரப்பு வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த பக்கத்து வயலின் உரிமையாளரான சந்தன பாண்டியன் (40) என்பவர் நீ எப்படி வரப்பை வெட்டலாம் என்று அவதூறான வார்த்தைகளால் பேசி கையில் வைத்திருந்த அரிவாளால் கருத்த பாண்டியனை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கருத்தபாண்டியன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருத்த பாண்டியனின் மகனான கார்த்திகேயன் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜாராம் விசாரணை மேற்கொண்டு மேற்படி சுந்தரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்

Tags

Next Story
ai solutions for small business