லாரி கவிழ்ந்து விபத்து: உள்ளூர்வாசி சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

லாரி கவிழ்ந்து விபத்து: உள்ளூர்வாசி சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு
X

ரயில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்தது கிடப்பதை படத்தில் காணலாம்

தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட உள்ளூர் வாசியால் மிகப் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது

கேரளாவில் இருந்து தமிழகத்தில் உள்ள தூத்துக்குடிக்கு பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தமிழக கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை எஸ் வளைவுபகுதி அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரியானது எஸ் வளைவு பகுதியில் தண்டபாளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில், அந்த வேலையில் நெல்லையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தபோது, அதனை பார்த்த புளியரை பகுதியை சேர்ந்த சண்முகையா என்ற நபர் எப்படியாவது ரயிலை நிறுத்தி விட வேண்டும் என ஓடி சென்று சற்று தொலைவில் வைத்து லைட் அடித்து சிக்னல் காண்பித்து ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால் மிகப்பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் லாரி முழுவதும் முழுமையாக சேதம் அடைந்த நிலையில், லாரின் டிரைவரான முக்கூடல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்

மேலும், லாரியின் கிளீனர் விபத்தின் போது கீழே குதித்து உயிர்தப்பிய நிலையில் அவர் தற்போது புளியரை வாகன சோதனை சாவடியில் உள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த புளியரை காவல்துறையினர், தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து உயிரிழந்தவரின் உடல் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் தண்டவாளப் பகுதியில் லாரியானது விபத்துக்குள்ளாகுள்ள நிலையில் அதனை சரி செய்யும் முயற்சியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, செங்கோட்டையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயிலும், சென்னையிலிருந்து கொல்லம் நோக்கி சென்ற ரயிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விபத்து நடந்த இடத்தில் கிடந்த லாரி முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு விபத்து நடந்த இடத்தில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டன.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!