உள்ளாட்சித் தேர்தல்: செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு திமுகவினர் வேட்புமனுத்தாக்கல்
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் களைகட்ட தொடங்கியது. தமிழகத்தில் தென்காசி,திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது 14, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் 144, ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் 221 ,ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் 1,905 என மொத்தம் 2,284 பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.
ஊராட்சித் தலைவர் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு சுயேச்சை சின்னங்களில் மட்டுமே போட்டியிட முடியும். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அரசியல் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடலாம்.
கடந்த 4 நாட்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டுமே வேட்புமனு தாக்கல் அதிக அளவில் நடைபெற்றது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடியாததால் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தது.
வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்கள் குவிந்தனர். ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது தேர்தல் வேட்புமனு தாக்கல் களைகட்ட தொடங்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu