நடுவக்குறிச்சி பள்ளி அருகே மது விற்பனை: 2 பேர் கைது

நடுவக்குறிச்சி பள்ளி அருகே மது விற்பனை: 2 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

நடுவக்குறிச்சி பள்ளி அருகே விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவக்குறிச்சி பகுதியில் பள்ளியின் அருகே புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக சார்பு ஆய்வாளர் வேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டதில், அங்கு விற்பனைக்காக புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாரியப்பன்(51) மற்றும் மகேஸ்வரி(42) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்துது கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 32.5 கிலோ புகையிலை பொருட்கள்,84 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!