செங்கோட்டை நூலகத்தில் நூலக வார விழா தொடக்கம் - பரிசளிப்பு

செங்கோட்டை நூலகத்தில் நூலக வார விழா தொடக்கம் - பரிசளிப்பு
X

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் நூலக வாரம் தொடக்க விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நூலகத்தில், நூலக வாரம் தொடக்கவிழா மற்றும் சதுரங்க போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் நல்நூலகர் இராமசாமி வரவேற்றுப் பேசினார். வாசகர் வட்டப் பொருளாளர்தண்டமிழ்தாசன் பா. சுதாகர் அரசுத் தேர்வுகள் பொறுப்பாளர் விழுதுகள் சேகர் ஓவியர் இராமைய்யா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக செங்கோட்டை உதவி காவல் ஆய்வாளர் சின்னத்துரை தலைமை தாங்கினார். செங்கோட்டை வேளாண் அலுவலர் அக்ரி ஷேக்மைதின் வாழ்த்துரை வழங்கினார். சதுரங்கப் போட்டிகளை பயற்றுனர் இடைகால் இசக்கி நெறிப்படுத்தி நடத்தினர். இந்தச் சதுரங்கப் போட்டியில் செங்கோட்டை மற்றும் தென்காசி வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இச்சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை செங்கோட்டை உதவி காவல் ஆய்வாளர் சின்னத்துரை வழங்கினார். நிறைவாக நன்னூலகர் இராமசாமி நன்றி கூறினார். நிகழ்வை மாரியப்பன் ,விஜி, முத்துமாரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!