அடவி நைனார் அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

அடவி நைனார் அணைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
X

பட விளக்கம்: அடவிநயினார் அணைப்பகுதியில் சிறுத்தை இருந்த போது எடுத்த படம்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து அவ்வப்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதை ஆகி வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேக்கரை பகுதியில் வனத்துறையினர் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாத வண்ணம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் உலாவந்த சிறுத்தை ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வனத்துறையினரை விரட்டியுள்ளது.

சிறுத்தை பார்த்த வனத்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து திகைத்து ஓடிய நிலையில், சிறுத்தையிடமிருந்து தப்பித்தோம் என்று வேறு பகுதிக்கு வனத்துறையினர் சென்ற நிலையில், சிறுத்தையானது வனத்துறையினரை விரட்டிய களைப்பில் மேக்கரை பகுதியில் உள்ள அன்பு இல்லம் என்ற பகுதியில் இளைப்பாறி கொண்டிருந்துள்ளது.

அதை பார்த்த சில இளைஞர்கள் ஒரு கட்டிடத்தில் மேல் பகுதியில் இருந்து அதனை வீடியோவாக பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பாக வனத்துறையினரிடம் கேட்டபோது மேக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் என்பது உள்ளதாகவும், வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது வனத்துறையினரை அந்த சிறுத்தை விரட்டியதாகவும், அதிலிருந்து தாங்கள் தப்பித்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் செல்லும் விவசாயிகள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!