கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது

கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது
X
கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.



தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் பயணிகள் தமிழக கேரள எல்லையான கோட்டை வாசல் வரை கேரள மாநில பேருந்தில் வந்து அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் ஆட்டோ போன்ற வாகனங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் காவல்துறையினர் ஆட்டோவில் வந்த நபரை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது.

விற்பனைக்காக கேரள லாட்டரி சீட்டுகளை கொண்டுவந்த தெற்கு கல்லிடைக்குறிச்சி புது காலனியைச் சேர்ந்த அழகேசன் என்ற நபர் மீது புளியரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர்கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 240 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 10,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business