கடையநல்லூரில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை

கடையநல்லூரில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை
X
மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனுஸ் மகன் முகம்மது அப்துல் காதர். இவர் 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு செல்ல தடைவிதித்த மனைவி தஸீமா பானு என்பவரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணையில், முகம்மது அப்துல் காதர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனுராதா, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு வழக்குரைஞர் சின்னத்துரைபாண்டியன் அரசு தரப்பில் ஆஜராகி வழக்கை நடத்தினார் .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!