கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு

கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு
X

 கடையநல்லூர் வனப்பகுதியில் இறந்து எலும்புக்கூடான நிலையில் ஆண் யானை. உடற்கூறு பரிசோதனை செய்து அதிகாரிகள் நடவடிக்கை.

கடையநல்லூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் யானை உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடனாநதி அமைந்துள்ளது. இதை சுற்றி உள்ள வனப்பகுதி இறந்து எலும்புக்கூடான நிலையில் யானை ஒன்றை அப்பகுதியில் ரோந்து பணியின் போது வனத்துறையினர் பார்த்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் உயர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர், வனகால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இறந்த யானையை உடற்கூறு பரிசோதனை செய்தனர்.

பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து 6வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும், யானையின் இறப்பானது இயற்கையாக நடை பெற்றது எனவும் உடற்கூறு ஆய்வு மூலம் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!