/* */

செங்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா!

செங்கோட்டை அருகே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

செங்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா!
X

பட விளக்கம்: செங்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட போது எடுத்த படம்.

செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா அறிவுறுதலின் பேரில் தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத்துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன் தலைமைதாங்கினார். நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் முன்னிலைவகித்தனா். நகரச்செயலாளா் கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலா் துாவி மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னா் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. தொடா்ந்து நகரின் முக்கிய வீதிகளில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. . நிகழ்ச்சியில் நகர கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினா்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் வார்டு பிரதிநிதிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 26 Feb 2023 6:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்