தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் கார்பருவ சாகுபடி பணிகள் தீவிரம்
தென்காசி பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குண்டாறு மற்றும் அடவிநயினார் கோவில் அணைகள் நிரம்பியது. கார் சாகுபடி பணிகள் தீவிரம்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ளது.
மாவட்டத்தில் மிகச் சிறிய நீர்த் தேக்கமான 36.10 அடி கொள்ளவு கொண்ட செங்கோட்டை குண்டாறு நீர்த்தேக்கம் ஏற்கனவே நிரம்பியுள்ளது.
இதே போன்று தற்போது 132.22 அடி கொள்ளவு கொண்ட மேக்கரை அடவிநயினார் கோவில் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 70 கன அடி நீர் உபரிநீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போன்று 72 அடி கொள்ளவு கொண்ட கருப்பாநதி அணையில் 69 அடி நீர் நிரம்பியுள்ளது.
இதனால் தென்காசி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கார்பருவ சாகுபடி பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் நாற்றுகள் அனைத்தும் கருகி விவசாயிகள் நஷ்டம் அடைந்ததாகவும், இந்த ஆண்டு உரிய நேரத்தில் மழை பெய்து அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் கார் சாகுபடி விவசாயிகள் நெற்பயிர் நடவு பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
வேலை ஆட்கள், கூலி உயர்வு மற்றும் உரத் தட்பாடு காரணமாக விவசாயிகள் பெரிதும் அவதிபட்டு வருகிறோம். எனவே நெல் குவிண்டாலுக்கு ரூ.2000 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu