ஆய்க்குடி பேரூராட்சியில் பாமகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

ஆய்க்குடி பேரூராட்சியில் பாமகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
X

ஆய்க்குடி பேரூராட்சி 4வது வார்டு பாமக வேட்பாளர் பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆய்க்குடி பேரூராட்சி 4வது வார்டு பாமக வேட்பாளர் பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆய்க்குடி பேரூராட்சி 4- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெரியசாமி மற்றும் பா.ம.க நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைக் வேட்பாளர்களும் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் பா.ம.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் இன்று ஆய்க்குடி பேரூராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பெரியசாமி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 4-வது வார்டு பகுதியில் உள்ள வீடுகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தின் போது தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் பொ. இசக்கிமுத்து, மாநில துணைத் தலைவர் மு.அய்யம் பெருமாள், வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சாகுல் ஹமிது, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவி, இளைஞரணி ராஜேஸ்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!