உரக்கடைகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு

உரக்கடைகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு
X

கடையநல்லூர் பகுதிகளில் நிலவி வரும் உர தட்டுபாடு குறித்து,  உரக்கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள்.

கடையநல்லூர் பகுதி உரக்கடைகளில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உரத் தட்டுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிக அலுவலர் முகைதீன்பிச்சை தலைமையில் தோட்டக்கலைத்துறை உதவி இணை இயக்குநர் ஆழ்வார்சாமி கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உர ஆய்வாளர் சிவமுருகன் கடையநல்லூர் வட்டாட்சியர் ஆதிநாராயணன் உள்ளிட்டோர் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், உரம் இருப்பு மற்றும் பதிக்கி வைத்து அதிக விளைக்கு விற்பனை செய்வது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது உரங்களை பதிக்கி வைத்து அதிக விளைக்கு விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் தெரிவிக்க 7812812750 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!