தென்காசி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை
தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் செங்கோட்டை வட்டாரம் சீவநல்லூரில் உள்ள பீட்டர் அல்போன்ஸ் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் தலைமை தாங்கினார். செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சட்டநாதன், சுரண்டை நகர்மன்ற தலைவரும், மாநில காங்கிரஸ் நெசவாளர் அணி செயலாளருமான வள்ளிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராஜசேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் மண்டல பொறுப்பாளர் அஸ்வதாமன் உரை ஆற்றினார். இக்கூட்டத்தின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை இந்தியாவின் பிரதமராக்கிட அனைவரும் பாடுபட வேண்டும்.
2) வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடங்க உள்ள கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைபெற உள்ள பாதயாத்திரையில் தென்காசி மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் இளைஞர் காங்கிரஸார் பங்கேற்க வேண்டும் எனவும்,
3) தென்காசி மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்து இளைஞர் காங்கிரஸை பலப்படுத்துவது.
4) தென்காசி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் சிறப்பு பேச்சாளர் பால்துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், ராம்மோகன், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சுப்பையா, மாவட்ட செயலாளர் கதிரவன், கடையநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஷீனா சபு, தென்காசி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் தலைவர் பாக்கியராஜ், தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் பால்ச்சாமி, வழக்கறிஞர் ரமேஷ், வைரமூர்த்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் சரவண முத்துசாமி, சந்தோஷ் ஜார்ஜ், சதீஷ், சட்டமன்ற தொகுதி தலைவர்கள் கடையநல்லூர் அயூப்கான், தென்காசி பிரேம் குமார், வாசுதேவநல்லூர் வழக்கறிஞர் ராஜ்குமார்,
கணக்கப்பிள்ளைவலசை கிராம காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாவட்ட சிறுபான்மைப்பிரிவு தலைவர் ரெசவு முகம்மது , மாவட்ட மாணவரணி தலைவர் சுரேஷ்,தென்காசி நகர்மன்ற உறுப்பினர் ரபீக், சுரண்டை நகர்மன்ற உறுப்பினர் ராஜ்குமார், இளைஞர் காங்கிரஸ் செங்கோட்டை ராஜீவ் காந்தி, மைக்கேல் திவாகர் மற்றும் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர்கள், வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கடையநல்லூர் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் அசன் இப்ராஹீம் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu