கடையநல்லூரில் சுயேச்சை வேட்பாளர் மரணம்

கடையநல்லூரில் சுயேச்சை வேட்பாளர் மரணம்
X

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மரணமடைந்த சுயேட்சை வேட்பாளர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் இறந்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இதனிடையே தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடையநல்லூர் ஒன்றிய நெடுவயல் கிராம பஞ்சாயத்து பகுதியிலுள்ள 7வது-வது வார்டில்ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 52 வயதான சுயேட்சை வேட்பாளர் பந்தல் ராதாகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பொழுது மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை உறவினர்கள் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் புதிய நீதிக் கட்சியின் தென்காசி மண்டல தலைவராக உள்ளார்.சுயேச்சை வேட்பாளர் என்பதால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!