நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர்

நீட் தேர்வில்   தமிழகத்தில் முதலிடம் பிடித்த இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர்
X

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் இந்திய அளவில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் ஆறாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுச் சாதனை படைத்தார்

இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் நீட் தேர்வில் இந்திய அளவில் 6 வது இடமும், தமிழக அளவில் முதலிடம் பெற்றார்

நீட் தேர்வில் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் தமிழகத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தார்.

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் இந்திய அளவில் தென்காசி மாவட்டம், இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப் ஆறாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுச் சாதனை படைத்தார். அகில இந்திய கேட்டகரி தரவரிசையில் சாதனை படைத்த இம்மாணவர் டெல்லி எம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குத் தகுதி பெற்றுள்ளார். பாரத் வித்யா மந்திர் பள்ளியில் மழலையர் பிரிவு முதல் 12ஆம் வகுப்புவரை தொடர்ந்து படித்து பள்ளியில் வழங்கப்பட்ட நீட் பயிற்சி மூலம் இம்மாணவர் அளப்பரிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாணவரின் வெற்றி குறித்து "எங்களது கல்வி நிறுவனத்தில் தொடர்ந்து வழங்கப்பட்ட பயிற்சியும், மாணவரின் கடின உழைப்பும், ஆசிரியர்களின் அரிய முயற்சியும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் காரணம்" என்று பாரத் கல்விக்குழுமச் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் கூறினார். இம்மாணவரின் தந்தையார் தமிழக அரசு நிறுவனமான தஞ்சை சிட்கோவில் கிளை மேலாளராகப் பணியாற்றுகிறார். தயார் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.

நீட் தேர்வில் இந்திய அளவில் ஆறாமிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்ற இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மாணவர் பிரதாப்பை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், முதல்வர் வனிதா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags

Next Story