சேர்ந்தமரத்தில் 960 மதுபாட்டில்கள் பதுக்கல்: 2 பேர் கைது

சேர்ந்தமரத்தில் 960 மதுபாட்டில்கள் பதுக்கல்: 2 பேர் கைது
X

சேர்ந்தமரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அண்ணாதுரை, பாண்டியராஜா ஆகியாேரை பாேலீசார் கைது செய்தனர்.

சேர்ந்தமரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் அதிரடி கைது 960 மதுபாட்டில்கள் பறிமுதல்.

சேர்ந்தமரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் அதிரடி கைது 960 மதுபாட்டில்கள் பறிமுதல்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வென்றிலிங்கபுரம் அய்யனார் கோவில் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் வேல் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த புதுகிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கையா என்பவரின் மகன் அண்ணாதுரை (42) மற்றும் வேட்டரம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த போத்திக்கண்ணு என்பவரின் மகன் பாண்டியராஜா(31) ஆகிய இரண்டு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business