பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
X

செங்கோட்டையில் இந்து முன்னணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு இந்து இயக்கங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு இந்து இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

லாவண்யா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்துபோன லாவண்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராமராஜா, துணைத்தலைவர் முத்துக்குமார், தென்காசி நகர பொதுச் செயலாளர் ராஜ்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், கருப்பசாமி, தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் அருணாச்சல பெருமாள், விஹெச்பி தளவாய், விஹெச்பி வழக்கறிஞர் பிரிவு வெங்கடேச பெருமாள், தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் நாராயணன் உட்பட ஏராளமான இந்து இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!