ஆஞ்சநேயர் ஜெயந்தி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

ஆஞ்சநேயர் ஜெயந்தி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
X

கடையநல்லூரில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி 

கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

வருடம் தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருத்தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு மதிய கால பூஜை நடைபெற்றது.

இதனை, தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமியை வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ai future project