தென்காசி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக ஹபிபூர் ரகுமான் நியமனம்!

தென்காசி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக ஹபிபூர் ரகுமான் நியமனம்!
X

பட விளக்கம்: தமிழக முதல்வரிடம் ஹபிபூர் ரகுமான் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.

தென்காசி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக கடையநல்லூரைச் சேர்ந்த ஹபிபூர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டார்

தென்காசி தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக ஹபிபூர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக கடையநல்லூர் நகர்மன்ற தலைவராக இருக்கும் மூப்பன் ஹபிபூர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி தெற்கு மாவட்டத்திறகு திமுக தலைமை கழகத்தால் வர்த்தக அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராக கடையநல்லூர நகர்மன்ற தலைவராக இருக்கும் ஹபீபுர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட வர்த்தக அணி தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஹபீபுர் ரகுமான், தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்துக்கு சென்று மாண்புமிகு தமிழக முதல்வரும் கழகத் தலைவருமான ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் கழக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப்பொதுச் செயலாளர் ராஜா, பொருளாளர் T.R.பாலு, மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களையும் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர் செல்லத்துரை ஆகியோரையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கடைய நல்லூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பம்மாள் நகர கழகசெயலாளர் அப்பாஸ் ஒன்றிய செயலாளர் சுரேஷ் நகர்மன்ற துணைத் தலைவர் ராஜையா ஒன்றிய குழு துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ் மாவட்ட திட்டக் குழு உறுப்பினரும் நகர்மன்ற உறுப்பினருமான முருகன். நகர்மன்ற உறுப்பினர்கள சிட்டி திவான் மைதீன் ராமகிருஷ்ணன் யாசர் கான் கண்ணன் ( எ )பாலசுப்ரமணியன் மாலதி தலைட்சுமி பாத்திமா மற்றும் கனகு முருகானந்தம் திமுக நகர கழக நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர்கள நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!