/* */

கடையநல்லூரில் பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா

கடையநல்லூரில் பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கடையநல்லூரில் பள்ளி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா
X

பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் பட்டம் வழங்கினார்.

பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உயர் கல்வி கற்க முன்வர வேண்டும் என்ற அடிப்படையில் கல்லூரியில் வழங்கப்படும் பட்டம் அளிப்பு விழா போன்று பல்வேறு பள்ளிகள் பட்டமளிப்பு விழா நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, பெஸ்ட் நர்சரி பிரைமரி பள்ளி ,பெஸ்ட் கிட்ஸ் ப்ளே ஸ்கூல், கே ஜி குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நிகழ்வு பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பெஸ்ட் கல்வி குழுமத்தின் சேர்மன் முகமது மைதீன் தலைமை வகித்தார். செயலர் முகமது காசிம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் கடையநல்லூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் குழந்தைகளுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் வேலம்மாள், அவர்களும் பெஸ்ட் பள்ளியின் முன்னாள் முதல்வர் ரெஜினா மேரி அவர்களும், டாக்டர் ஜவாஹிரா சலீம், அவர்களும் கலந்து கொண்டு கேஜி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு கௌரவித்தார்கள் நிகழ்வில் பள்ளியின் தாளாளர் த முஹம்மது யூசுப் வரவேற்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெற்றோர்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் இக்பால், முதல்வர் ராஜேஸ்வரி, துணை முதல்வர் ரதி, பெஸ்ட் நர்சரி பிரைமரி பள்ளியின் முதல்வர் அனுசியா, பெஸ்ட் கிட்ஸ் பிளே ஸ்கூல் ன் முதல்வர் அனிஷா, மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 2 March 2023 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...