செங்கோட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

செங்கோட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
X

விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்காக போலீசார் எடுத்து சென்றனர்.

செங்கோட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் எடுத்து சென்றனர்.

செங்கோட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். பொதுமக்கள் திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல இடங்களில் காவல்துறையினருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் கீழப்புதூர் பகுதியில் காவல்துறையினரின் அனுமதியின்றி விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செங்கோட்டை காவல்துறையினர் மற்றும் புளியரை காவல்துறையினர் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எடுக்க முயற்சி செய்தபோது, அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விநாயகர் சிலையை எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்து சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெறாமல் இந்த விநாயகர் சிலையானது வைக்கப்பட்டுள்ளதாகவும் இது சட்டவிரோதமான செயல் எனவும் கூறி பொது மக்களுக்கு எடுத்துரைத்த நிலையில், 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு விநாயகர் சிலையை தாங்களே எடுத்துச் சென்று கரைப்பதாக உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையானது காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆற்றில் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

Tags

Next Story
future ai robot technology