சுதந்திர போராட்ட தியாகி வீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள்..!

சுதந்திர போராட்ட தியாகி வீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள்..!
X

வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்

செங்கோட்டையில் வீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது. அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது

சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதனின் 113-வது நினைவு தினம் அனுசரிப்பு- அரசு மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதனின் 113 -ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நினைவை போற்றும் வகையில் வீர வாஞ்சிநாதனின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தில் உள்ள வீரவாஞ்சிநாதனின் திருவுருவ சிலைக்கு அரசு மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பல்வேறு அரசு துறைஅதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீர வாஞ்சிநாதனின் முழு உருவ சிலைக்கு முதலில் வீர வாஞ்சிநாதன் பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, திமுக, அதிமுக, பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் அகில இந்திய பிராமணர்கள் சங்கம் சார்பிலும் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வீர வாஞ்சிநாதனின் நினைவை போற்றும் வகையில் வீரமுழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story