செங்கோட்டை அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

செங்கோட்டை அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
X

செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை, சுலைமான் நபி பள்ளி ஜமாத் அசோசியேசன் இணைந்து செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சர்க்கரை மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் தமிழரசன், பொதுநல மருத்துவர் அன்பரசன், எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வரங்கராஜூ, மகப்பேரு நிபுணர் மருத்துவர் தமிழருவி, சித்தமருத்துவர் கௌதமி தமிழரசன், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கிருஷ்ணபரத், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சடகோபன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முத்துக்குமாரசாமி, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரவீன்குமார் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் சர்க்கரை அளவு, இரத்த அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுந்த உணவு ஆலோசனைகளுடன் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகள் இலவமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!