செங்கோட்டை அருகே கற்குடியில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்
கற்குடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடந்தது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் வைத்து சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி எம்.சுனில்ராஜா தலைமை தாங்கினார். கற்குடி ஊராட்சி மன்ற தலைவா் முத்துபாண்டியன், துணைத்தலைவா் பாக்கியலெட்சுமி ஆகியோர் முன்னிலைவகித்தனா். பணிநிறைவு சிஐடி.அண்ணாமலை அனைவரையும் வரவேற்று பேசினார்.
வழக்கறிஞா்கள் சுடர்முத்தையா, இராமலிங்கம், கார்த்திகைராஜன், பாத்திமாசித்திக் ஆகியோர் சட்ட நுணுக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கவுரையாற்றினா்.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய நீதிபதி எம்.சுனில்ராஜா, செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சட்டம் சார்ந்த சட்டம் சாராத அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தேடிக்கொள்ளலாம்.
இந்த வட்ட சட்டப்பணிகள் குழுவின் நோக்கம் என்னவென்றால் சட்டத்தின் முன் அனைவருக்கும் சமம் ஏழை, வசதி படைத்தவன் என்ற வேறுபாடு கிடையாது. வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இந்த பணிகளை செய்து வருகிறது. இதில் உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு தேடிக்கொள்ளலாம்.
மேலும் நீண்ட காலமாக நடந்து வரும் வழக்குகளை மக்கள் நீதிமன்றம் சமரச தீர்ப்பாயம் மூலம் தீர்வு தேடிக்கொள்ளலாம். அப்படி தீர்வு கிடைக்கப்பெற்றவா்களுக்கு வழக்குகாக தங்கள் செலவு செய்த தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்த முகாமில் அதிமாக பெண்கள் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த முகாம் மூலமாக தங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகமிக அவசியம் எனவே பெண் குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களை கல்வி பயில ஏற்பாடு செய்து அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற வழிவகை செய்திட வேண்டும்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞா்கள் மாலதி, சாமி, குமார் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் குத்தாலிங்கம், வேல்விழி, பத்மாவதி, அம்பிகா, வடகாசி, வசந்தகாளி, திருமலைக்குமார், வேலம்மாள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் ஊராட்சி செயலா் இசக்கி நன்றி கூறினார் இதற்கான ஏற்பாடுகளை வட்டசட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணின் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu