செங்கோட்டையில் அரசமரம் சேவை அமைப்பின் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்

செங்கோட்டையில் அரசமரம் சேவை அமைப்பின் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்
X

செங்கோட்டையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்.

செங்கோட்டையில் அரசமரம் கண்பார்வை குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோர்க்கான சேவை அமைப்பு சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

செங்கோட்டையை அடுத்துள்ள பூலாங்குடியிருப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதிஉதவியுடன் திருநெல்வேலி டாக்டா்அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து விசுவநாதபுரம் அரசமரம் கண்குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோர்கான சேவை அமைப்பின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமிற்கு பொதுமருத்துவா் டாக்டா் சுபஹான் மற்றும் குடும்பத்தார் தலைமைதாங்கினா். செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் டாக்டா் கலா, பூலாங்குடியிருப்பு முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் ஜமாத் தலைவா் முகம்மதுஹனீபா ஆகியோர் முன்னிலைவகித்தனா். விசுவநாதபுரம் அரசமரம் கண்குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோர்கான சேவை அமைப்பின் நிறுவனா் மன்சூர் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

முகாமில் திருநெல்வேலி டாக்டா் அகர்வால் கண் மருத்துமனை சார்பில் டாக்டா் பானுலெஷ்மி, முதன்மை முகாம் மேலாளா் மாணிக்கம், விழிஒளி ஆய்வாளா் சிஞ்சு, கண் நல மருத்துவ ஆலோசகா் தாசன் மற்றும் குழுவினா் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். நிகழ்ச்சியில், சாய் பஞ்சகர்மா, பிசியோதொரபி கிளினிக் சென்டா் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

செங்கோட்டை அப்பல்லோ பாரமா்ஸி பணியாளா்கள் சமூக ஆர்வலா்கள், தன்னார்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் பூலாங்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முடிவில் சேவை அமைப்பின் மேலாளா் விஜயலெஷ்மி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அரசமரம் கண்பார்வை குறைபாடு மற்றும் கண் பார்வையற்றோர்க்கான சேவை அமைப்பு செய்திருந்தது.

Tags

Next Story
the future of ai in healthcare