வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது
X
கைது செய்யப்பட்ட 4 பேர்.
By - S. Esakki Raj, Reporter |4 Nov 2021 5:48 PM IST
தென்காசி அருகே வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில், வனவர் அம்பலவாணன், செல்லத்துரை , வனக்காபாளர் ஆறுமுகம், ராஜா, முத்துசாமி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வேட்டை நாய்களுடன் வேட்டைக்கு சென்ற 4 நபர்கள் கைது செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரன்படி, தலா ரூபாய் 30000 வீதம் மொத்தம் 120000 /- அபராதம் விதிக்கப்பட்டது. இனிய வரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என இதன் மூலம் வனத்துறை சார்பில் எச்சரித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu