உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த வனத்துறையினர்

உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த வனத்துறையினர்
X

திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் இருக்கும் கடையநல்லூர் யானையை படத்தில் காணலாம்

கடையநல்லூரில் உரிமம் புதுப்பிக்கப்படாததால் தர்காவில் உள்ள வளர்ப்பு யானையை முகாமிற்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்

முறையான லைசன்ஸ் இன்றி தர்காவில் வளர்க்கப்பட்ட யானை பறிமுதல். யானையின் நினைவாக செல்பி எடுத்து கொண்ட பொதுமக்கள். யானை பாகன் கண்ணீர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பிரபலமான மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது. இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை உள்ளது.

இந்த யானையை கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான உரிமம் பெறாமல் இருந்ததால் யானை சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை அந்த குழு பார்வையிட்டு சென்றது. அதன் பின்னர் உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது

அதனைத் தொடர்ந்து இந்த யானை கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் கைப்பற்றி திருச்சியில் உள்ள யானை முகாமிற்கு அழைத்துச் சென்றனர் இதனை கேள்விப்பட்ட பொதுமக்கள் தர்காவை சுற்றிலும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது

இந்த பெண் யானையின் வயது வயது 58ஆகும் இதனின் எடை 4.5டன் ஆகும் இந்த தர்காவிற்கு இது ஐந்தாவது யானையாகும் நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது பலருக்கு வேதனையை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர் யானைப்பாகன் நத்கர் பாதுஷா கண்ணீர் விட்டு யானைக்கு பிரியா விடை கொடுத்தார்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil