செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ

செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ
X

செங்கோட்டை குண்டாறு அணைக்கு அருகே உள்ள பணிமுண்டன் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ.

செங்கோட்டை அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க, வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணைக்கு அருகே உள்ள பணிமுண்டன் வனப்பகுதியில் தீ பற்றி எரிய தொடங்கியது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பற்றிய தீ வெயிலால் காய்ந்திருந்த சுக்கு, நாரி புல் போன்ற எளிதில் தீ பற்றும் புற்களால் மிக வேகமாக பரவியது.

தீ குறித்த தகவல் அறிந்த செங்கோட்டை வனத்துறை மற்றும் களக்காடு முண்டண்துறை வனப்பகுதியினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். செங்கோட்டை வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன், செங்கோட்டை வனவர் பாண்டியராஜன், குற்றாலம் வனவர் அழகர் ராஜா, வேட்டை தடுப்பு காவலர்கள், வனக்காப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!