அச்சன்புதூர் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: சுகாதாரத்துறையினர் அதிரடி

அச்சன்புதூர் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: சுகாதாரத்துறையினர் அதிரடி
X

அச்சன்புதூர் அருகே வடகரையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் அபராதம் விதித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை.

அச்சன்புதூர் அருகே வடகரையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை - அபதாரம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை.

அச்சன்புதூர் அருகே வடகரையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை -அபதாரம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அதன்படி முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அடிக்கடி சோப்பு போட்டு பொதுமக்கள் தங்களது கைகளை கழுவ வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறையினர் செங்கோட்டை சாலையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அபதாரம் மற்றும் கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முக கவசம் அணியாமல் வந்த பலர் அ்ங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இருப்பினும் அவர்களையும் சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களிடம், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது பற்றியும், அதை தடுக்க முக கவசம் அணிய வேண்டிதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story