புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
X

கேரளாவிலிருந்து மீன் லோடு ஏற்றி வந்த வாகனம் 

தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தென்காசி மாவட்டம்,கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை கண்காணிக்கும் விதமாக தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் 24 மணி நேரமும் சோதனைபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கேரளாவிலிருந்து மீன் லோடு ஏற்றி வந்த வாகனங்களில் அதன் கழிவுநீர் சாலையில் விழுமாறு வந்த மூன்று வாகனங்களுக்கு தலா 2500 ரூபாய் அபராதமும்,மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் ஜல்லி ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு தலா 2000 மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் இருக்கும் எடைக்கு ஏற்றாற்போல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..

காவல்துறையினரின் இத்தகைய கடும் நடவடிக்கை மூலம் தற்போது புளியரை சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் முறையாக செல்வதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்..

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!