டெல்லியில் பெண் காவலர் படுகொலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயலாளர் பைசல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லியில் கடந்த வாரம் ராபியா என்கிற பெண் போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் பைசல் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்க தவறிவிட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
காவல்துறையில் பணியாற்றிய பெண் போலீசாருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான இப்பெண் மனித மிருகங்களால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பெண் போலீசாரின் உடல் சிதைக்கப்பட்டு கற்பழித்து படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் வெளிவராதபடி அரசும் மூடி மறைக்கும் வேலையை செய்திருக்கிறது. டெல்லியின் பாதுகாப்புத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்கிற போதும் இந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்து தண்டிக்கப்படாமல் இருப்பது மத்திய அரசு பெண்களை பாதுகாப்பதில் தவறிவிட்டது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம், மக்காநகர், மதினா நகர், தவ்ஹீத் நகர், இக்பால் நகர், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, வாவா நகரம், வீரணம், மாலிக்நகர், பொட்டல்புதூர் போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் வல்லம் அஹ்மத் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu