வனத்துறையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!
பட விளக்கம்: வடகரைப் பகுதியில் வனத்துறை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்
வன விலங்குகளால் வாழ்வாதாரத்தை இழந்து வரும் விவசாயிகள் - நடவடிக்கை எடுக்காத வனத்துறையினருக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகளான காட்டுப்பன்றிகள், யானைகள் உள்ளிட்டவைகள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள வடகரை, பண்பொழி, சொக்கம்பட்டி, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர் புகார் அளித்தும் வனத்துறையினர் வனவிலங்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வனத்துறையினருக்கு கண்டனம் தெரிவித்து வடகரை பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏராளமான விவசாயிகள் ஒன்றிணைந்து வனத்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி வரும் நிலையில், யானைகள் நடமாட்டத்தை தடுக்கவில்லை என்றால் விவசாயிகளே இந்த பகுதியில் இல்லாமல் போய்விடுவார்கள் என ஆவேசப்படும் விவசாயிகள் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து எடுத்து அதனை கட்டுப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu