குடும்ப பிரச்சனை - மனைவியை கொன்ற கணவனுக்கு வலை

குடும்ப பிரச்சனை - மனைவியை கொன்ற கணவனுக்கு வலை
X

செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கீழப்புதூர் பகுதியைச் சார்ந்த ராஜி-சுவேதா தம்பதி .இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஸ்வேதா ராஜியை விட்டும்,குழந்தைகளை விட்டும் பிரிந்து சென்று விட்டதால் ராஜி இரண்டாவது திருமணம் செய்து தனியாக குடித்தனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜியின் குழந்தைகள் அவரது பாட்டி தெய்வானை வளர்ப்பில் இருந்துள்ளனர். கஸ்தூரி மற்றும் அவரது சகோதரிகள் இரண்டு குழந்தைகள், மற்றும் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கஸ்தூரிக்கு புளியங்குடி பகுதியை சேர்ந்த முப்புடாதி என்பவர் மகன் கண்ணன் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்ற நிலையில் இரண்டாவதாக கஸ்தூரியை திருமணம் முடித்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வருவதும் கஸ்தூரி சொந்த ஊரான கீழப்புதூர் வருவதும் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் கஸ்தூரி கணவனிடம் கோபித்துக்கொண்டு கீழப்புதூர் வந்துள்ளார். அப்பொழுது கணவன் மனைவி இடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கண்ணன் மனைவியை பார்த்து அழைத்து செல்ல புதூருக்கு வந்துள்ளார். அப்போது அவரது பாட்டி, தெய்வானை பேத்தி வேலைக்கு சென்றிருப்பதாக அவரது கணவன் கண்ணனிடம் தெரிவிக்கவே அவர் மனைவி வருகைக்காக காத்து இருந்த நிலையில் பணி முடித்து சுமார் 6.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டுக்கு செல்லும் பாதையில் சாலையின் ஓரத்தில் இரண்டு லாரிகளுக்கிடையே மோட்டார்பைக்கில் கண்ணன் மறைந்து இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த கஸ்தூரியை கண்ணன் மோட்டார்பைக்கில் சென்று மோதி கீழே தள்ளி கையில் வைத்திருந்த வாளால் வெட்டியுள்ளார். இதில் கஸ்தூரி பரிதாபமாக பலியானார். அவரது கணவர் தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து உடனடியாக புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் அவரது கணவரை மோட்டார்பைக்கில் விரட்டியும் அவரை பிடிக்க முடியவில்லை.இது குறித்து தகவல் அறிந்த தென்காசி டிஎஸ்பி., கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு கொலையான கஸ்தூரியின் உடலை தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!