வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்திய மாலை நேர பள்ளி

வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்திய மாலை நேர பள்ளி
X

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்கல்லூரி சார்பில்  மாலைப் பள்ளி நடத்தப்பட்டது

தென்காசி மாவட்டம், நன்னகரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாலைப்பள்ளி நடத்தப்பட்டது

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எஸ். தங்கப்பழம், வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், நன்னகரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாலைப்பள்ளி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகளான ஆர்த்தி, ஜான்சிராணி, மெர்லின், நந்தனா பாஜி, ரங்கீலா, ராஜாதி, சபிதா, சுபஸ்ரீ, ஹம்சவேணி, நிவேதா மற்றும் சவுமியா ஆகியோர் நடத்தினர். மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரங்களின் பயன்கள், காடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம், வன விலங்குகளின் பாதுகாப்பு, அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டு அதனைக் குறித்த செய்திகளும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் நன்னகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய பெருமக்களும் ஊர் மக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!