செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா
X

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா 

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு அனைவருக்குமான சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பாரம்பரிய விளையாட்டுகளுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனை இயற்கையில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. மருத்துவமனையில் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு அனைவருக்குமான சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா கலந்துகொண்டார்.

செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் அவர்கள் தாமாக முன்வந்து அனைத்து பணியாளர்களுக்குமிடையே ஒற்றுமையும் சமத்துவமும் நல்லன்பும் பெருகிட வேண்டும் என்பதற்காக தனது சொந்த செலவில் ஆண்களுக்கெல்லாம் வேட்டி சட்டையையும் பெண்களுக்கெல்லாம் வண்ணப் புடவை சட்டையையும் வாங்கி பரிசளித்தார். பின்னர் மதிய விருந்து நடைபெற்றது.

மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் மருத்துவப் பணிகளை இயக்குனர் அலுவலக பணியாளர்கள், ஆகியோர் விளையாட்டு மற்றும் அறிவுத்திறன் போட்டியில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்.

போட்டியில் வென்றவர்களுக்கு இணை இயக்குனர் பிரேமலதா பரிசுகள் வழங்கினார். அனைவரும் புத்தாடைகளுடன் விழாவில் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!