தென்காசி வடகரை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தென்காசி வடகரை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
X

பட விளக்கம்: வடகரை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது எடுத்த படம்.

Vadakarai Dam-குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டு வந்திருந்து ஆக்கிரமிப்பு அகற்றக்கூடாது என்று கடும் வாக்குவாதம் செய்தனர்.

Vadakarai Dam-தென்காசி மாவட்டம் வடகரையில் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஒரு வேப்ப மரத்தையும் அதன் அடியில் ஒரு பீடம் அமைத்து நீண்ட நாட்களாக வழிபட்டு வந்தனர்.

இது புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று வாவா மைதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது

ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் அது செயல்படுத்தப்படாததால் மீண்டும் வா வா மைதீன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் . இதையடுத்து இரண்டு வாரங்களில் அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் வேண்டும் உத்தரவிட்டது.

இதன்படி இன்று வடகரை பேரூராட்சி நிர்வாக அதிகாரி தமிழ்மணி தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடுகளை செய்தனர்.

அப்போது குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டு வந்திருந்து ஆக்கிரமிப்பு அகற்றக்கூடாது என்று கடும் வாக்குவாதம் செய்தனர். பெண்கள் அந்த பீடத்தில் நடத்தி வழிபட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியதையடுத்து முதல் கட்டமாக அங்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று இடிக்கப்பட்டது .

இதன்பிறகு பிரச்சனைக்குரிய இடத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டு அங்கு யாரும் செல்ல முடியாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!