கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் யானைகள் அட்டகாசம்: விவசாய நிலம் சேதம்

கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் யானைகள் அட்டகாசம்: விவசாய நிலம் சேதம்
X

யானைகள் சேதப்படுத்திய விவசாய நிலம்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள சொக்கம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் சொக்கம்பட்டி பகுதிக்குள் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக 10 பெரிய யானைகள், 2 குட்டி யானைகள் உள்ளிட்ட 12 காட்டு யானைகள் அடங்கிய யானை கூட்டம் ஒன்று சொக்கம்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சுற்றித்திரிந்து உள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் வனத்துறையினர் நேற்று இரவு மேலச்சொக்கம்பட்டி பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தனர்.

ஆனால், யானை கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் அங்கிருந்து கீழச்சொக்கம்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதாவது, சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரையா என்பவருக்கு சொந்தமான 500 வாழை மரங்கள், வள்ளிநாயகம் என்பவருக்கு சொந்தமான 150 தென்னை மரங்கள், மேலும், அதே பகுதியை சேர்ந்த வலங்கையா, வேலுச்சாமி வெள்ளத்துரை உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் 50க்கும் மேற்பட்ட மா, பலா மரங்கள் உள்ளிட்டவைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடையநல்லூர் வனத்துறையினர் தற்போது அந்தப் பகுதியில் முகாமிட்டு சேத மதிப்பு குறித்து பார்வையிட்டு வருகின்றனர். மேலும், இன்று இரவு காட்டுயானை கூட்டங்கள் ஊருக்குள் புகாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வனத்துறையினர் தற்போது தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்