மாணவர்களின் கல்வி செலவை ஏற்பேன்- அமமுக வேட்பாளர்

மாணவர்களின் கல்வி செலவை ஏற்பேன்- அமமுக வேட்பாளர்
X

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு மாணவ மாணவிகளின் கல்வி செலவுகளை முழுவதும் ஏற்றுக்கொள்வேன் என அமமுக வேட்பாளர் அய்யாதுரை பாண்டியன் கூறினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் அய்யாத்துரை பாண்டியன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் கடையநல்லூர் நகர பகுதியில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சியான தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவ மாணவிகளுக்கு கடையநல்லூர் தொகுதியில் 4 இடத்தில் பயிற்சி மையம் திறக்கப்படும். நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு மாணவ மாணவிகளின் கல்வி செலவுகளை முழுவதும் ஏற்றுக்கொள்வேன். அதோடு கடையநல்லூர் பகுதியில் தென்னை சார்ந்த விவசாயம் அதிகம் செய்யப்படுவதால் தென்னை விவசாயம் சார்ந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருவேன் என தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!