கேரள எல்லையில் போக்குவரத்து பெண் அதிகாரியிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

கேரள எல்லையில் போக்குவரத்து பெண் அதிகாரியிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
X

கேரள எல்லையில் பெண் போக்குவரத்து அதிகாரி காரில் இருந்து கட்டு கட்டாக பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்

தமிழக கேரள எல்லையில் போக்குவரத்து பெண் அதிகாரியிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்

தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளரின் காரை இடைமறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை- கட்டுக்கட்டாக ரூ.2.70 லட்சம் பணம் பறிமுதல்.

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடியில் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாலை முதல் தமிழக-கேரள எல்லையான புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி அருகே மாற்று உடையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இரவு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி என்பவர் தனது பணியை முடித்துவிட்டு, தனது கணவரான ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது, தவணை விலக்கு அருகே லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பிரேமா ஞானகுமாரியை தடுத்து நிறுத்தி அவர் கொண்டு சென்ற பேக்கை சோதனை செய்து உள்ளனர்.

அப்பொழுது, அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, இந்த பணம் யாருடையது அலுவலக பணமா? அல்லது லஞ்ச பணமா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்திய போது பிரேமா ஞானகுமாரி பல்வேறு கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக பெற்ற பணம் என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அவரிடம் இருந்த ரூ.2.70 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக-கேரளா எல்லையான புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடியில் பணி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மரித்து கட்டு கட்டாக லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் தமிழக கேரளாவில் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story
ai powered agriculture