சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் கொடை விழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்

சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் கொடை விழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்
X

பால்குடம் எடுத்த பக்தர்கள்.

சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் நடைபெற்ற கொடை விழாவில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் அச்சம்புதூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கிலி பூதத்தார் கோவில் அமைந்துள்ளது. வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை கொடைவிழா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் கோவில் கொடை சமயத்தில் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது.

இந்தாண்டுக்கான கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. இன்று காலை சுவாமி சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இரண்டாம் நாள் கொடை தொடங்கியது. காலை பால்குடம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து சுவாமி சங்கிலி பூதத்தாருக்கு அபிஷேக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது . மாலை பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சாமக்கொடை, நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!