நீட்டிற்கு எதிராக திமுக அறிவித்திருக்கும் கையெழுத்து இயக்கம் கோமாளித்தனமானது - டாக்டர் கிருஷ்ணசாமி

நீட்டிற்கு எதிராக திமுக அறிவித்திருக்கும் கையெழுத்து இயக்கம் கோமாளித்தனமானது - டாக்டர் கிருஷ்ணசாமி
X

பட விளக்கம்: கடையநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிய போது எடுத்த படம்.

நீட்டிற்கு எதிராக திமுக அறிவித்திருக்கும் கையெழுத்து இயக்கம் கோமாளித்தனமானது - டாக்டர் கிருஷ்ணசாமி

திமுக சார்பில் நீட்டுக்கு எதிராக அறிவித்து இருக்கக்கூடிய கையெழுத்து இயக்கம் என்பது கோமாளித்தனமானது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தென்காசியில் பேட்டி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி நாடாளுமன்ற புதிய கிளை பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறுகையில்,

கடந்த தேர்தல்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டுக்கு எதிராக முதல் கையெழுத்து இருக்கும் என்று கூறிவிட்டு தற்போது சாதாரண பொது மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்து பித்தலாட்டம் நடத்தி வருகிறது.

அந்த வகையில் திமுக இளைஞரணி சார்பில் நடக்க இருக்கும் நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் என்பது கோமாளித்தனமானது பொது மக்களை ஏமாற்றக்கூடிய செயலாக உள்ளது என தெரிவித்தார்.

நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தோற்றுவிட்டதாக கூறி தமிழகத்தில் நல்லாட்சி நடத்துவதற்கு குறுக்கே நிற்கக் கூடாது என காட்டமாக தெரிவித்தார்.

Tags

Next Story
ai as the future