வடகரையில் மருத்துவ முகாம் அமைக்க வலியுறுத்தி திமுக நிர்வாகி மனு

வடகரையில் மருத்துவ முகாம் அமைக்க வலியுறுத்தி திமுக நிர்வாகி மனு
X

வடகரையில் மருத்துவ முகாம் அமைக்க வலியுறுத்தி திமுக மாநில மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் ஷெரிப் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

வடகரையில் மருத்துவ முகாம் அமைக்க திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் கோரிக்கை

வடகரையில் மருத்துவ முகாம் அமைக்க திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் வடகரையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த கன மழையால் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என திமுக மாநில மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் ஷெரிப் தலைமையில் மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட ரங்கன் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அனிதா மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் ஆகியோரிடம் வடகரை பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து பொது மக்களை காக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் திமுக நிர்வாகிகள் சாகுல்ஹமீது, இஸ்மாயில் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!