செங்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலா் அஜண்டா கிழிப்பு

மன்றத்தின் நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலா் மேரி அந்தோணிராஜ்.
Today Tenkasi News -தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் வைத்து நகர்மன்ற அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி தலைமைதாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, மேலாளா் கண்ணன், பொறியாளா் கண்ணன், சுகாதார அலுவலா் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் துவங்கியதும் 9வது வார்டு திமுக கவுன்சிலா் மேரி அந்தோணிராஜ் தனது வார்டு குறைகளை தலைவரிடம் கூறியிருந்தேன்; ஆனால் அஜண்டாவில் அது இடம் பெறவில்லை ஏன் என கேள்வி கேட்டு மன்றத்தின் நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து பொறியாளா் கண்ணன் இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாது எனவும் தங்கள் வார்டு குறைகள் குறித்த கோரிக்கைள் அஜண்டாவில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து தனது போராட்டத்தை கைவிட்டார். 10வது வார்டு திமுக உறுப்பினா் பேபிரெசவுபாத்திமா தனது வார்டு பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரினார்.
அதனைதொடா்ந்து 5வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் ஜெகன் பேசும்போது நமது நகராட்சி பகுதிகளில் சுமார் 15நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்தந்த வார்டுக்கு குடிநீர் வழங்கப்படும் நாட்கள் குறித்த முறையான அறிவிப்புகள் நகராட்சி நிர்வாகத்தால் கொடுக்கப்படுவதில்லை.
எனவே குடிநீர் வழங்கும் நாட்கள் குறித்த அறிவிப்புகளை தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என பேசினார். பின்னா் தீர்மானங்கள் அனைத்து ஆல்பாஸ் என கூறி தலைவா் கூட்டத்தை முடித்து வெளியேறினார். இதனையடுத்து 8வது வார்டு திமுக உறுப்பினரும் நகரச்செயலாளருமான எஸ்எம்.ரஹீம் தலைமையில் திமுக உறுப்பினா்கள் மேரிஅந்தோணிராஜ், பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள், சந்திரா, இசக்கித்துரைப்பாண்டியன் ஆகியோர் நகர்மன்ற தலைவரின் தன்னிச்சையான போக்கை கண்டித்து நகராட்சி ஆணையாளிரிடம் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 12வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரைப்பாண்டியன் அஜண்டாவை கிழித்து நகர்மன்ற தலைவரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
பின்னா் திமுக கவுன்சிலா்கள் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு நகர்மன்ற தலைவரின் தன்னிச்சையான போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுப்பட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu