நயினாகரத்தில் இந்து தேசிய கட்சியினர் கபசுரக் குடிநீர், முககவசம் வழங்கல்

நயினாகரத்தில் இந்து தேசிய கட்சியினர் கபசுரக் குடிநீர், முககவசம் வழங்கல்
X

நயினாகரத்தில் நடைபெற்ற கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.

நயினாகரத்தில் இந்து தேசிய கட்சியினர் கபசுரக் குடிநீர், முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், நயினாகரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் இந்து தேசிய கட்சியின்நிறுவனத் தலைவர் நெல்லை எஸ்.எஸ்.மணி ஆணைக்கிணங்க இந்து தேசியக் கட்சி மற்றும் சித்தா மருத்துவ கல்லூரி மாணவி டாக்டர் ஜோதி வடிவு இணைந்து நடத்திய கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இந்து தேசியக் கட்சியின் தென்காசி மாவட்ட செயல் தலைவர் பிச்சுமணி தலைமை வகித்தார். சித்தா மருத்துவ கல்லூரி மாணவி டாக்டர் ஜோதி வடிவு முன்னிலை வகித்தார். இதில் நயினாகரம் ஊர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட செயல் தலைவர் பிச்சுமணி, சித்தா மருத்துவக் கல்லூரி மாணவி டாக்டர் ஜோதி வடிவு, நயினாகரம் கிளை தலைவர் கனகராஜ், செயலாளர் முருகேசன், அவைத்தலைவர் குலசேகரன், யமஹா குமார், மயில் ராஜ், மகளிர் அணி தலைவி ராஜீ, கோமதி நாயகம், குலசேகரன், ராஜேஸ்வரி, சீவல முத்து, குலசேகர செல்வி, கற்பக வடிவு, ஹரிஹரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

முடிவில் பிச்சுமணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story