கடையநல்லூரில் கணவனுடன் தகராறு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கடையநல்லூரில் கணவனுடன் தகராறு: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

கடையநல்லூரில் குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலக்கடையநல்லூர் இந்திராநகர் 3ம் தெருவை சேர்ந்த நாககனி மனைவி ராஜேஸ்வரி (20). இருவரும் காதலித்து திருமணமாகி 18 மாதங்கள் ஆகிறது. இவர்களுக்கு 10 மாதத்தில் மாய இனியன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாககன்னி மனைவி ராஜேஸ்வரி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.அங்கு நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 18 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business