தென்காசி; காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம், விவசாயிகள் கவலை

காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் (கோப்பு படம்)
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான மேக்கரை,வடகரை, பண்பொழி, அச்சன்புதூர், இலத்தூர் சாம்பவர் வடகரை, ஆய்க்குடி,கடையம்,ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதிகளில் தற்போது விவசாயிகள் நெற் பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.
மலையடிவார பகுதியில் அமைந்திருப்பதால் அடிக்கடி வனவிலங்குகளான யானை, கரடி,சிறுத்தை,மான் ஆகியவற்றால் விளைநிலங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடகரை மேட்டுக்கால் பகுதியில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததாலும், போதிய தண்ணீர் இல்லாததாலும் விவசாயிகள் கடந்த முறை விவசாயம் செய்யவில்லை. தற்போது பெய்த மழையை நம்பி சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். 40 நாட்கள் பயிரான நிலையில் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாத வண்ணம் வலை அடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதையும் சேதப்படுத்தி விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது..
இரவு முழுவதும் காட்டுப் பன்றிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சில நேரங்களில் காட்டுப்பன்றிகள் மனிதர்களையும் தாக்க நேரிடுகிறது எனவே பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu